குடியரசு தின விழா கொண்டாட்டம்

நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியரசு தின விழா கொண்டாட்டம்
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு நகராட்சியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அதிகுர் ரஹ்மான், ஜானகி, நாகஜோதி, பாரதி, சின்னா, வழக்கறிஞர் அப்துல் ஹமீத், நஹிஹா ஜுபேர் அஹமத், தேன்மொழி, சுல்தானா, இந்திரா காந்தி, அப்துல் ஜமீல், நகராட்சி அதிகாரிகளான ராஜ் குமார், அஜய் குமார், சுரேஷ்குமார், ராஜேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com