கார் மோதி பெயிண்டர் பலி

தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
கார் மோதி பெயிண்டர் பலி
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) பெயிண்டர்.

இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com