ரெயில் முன் பாய்ந்து முதியவர் சாவு

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ரெயில் முன் பாய்ந்து முதியவர் சாவு
Published on

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com