பைக்கில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

பலத்த காயமடைந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பைக்கில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி இரவு மிட்டூரில் இருந்து பறவைகுட்டை நோக்கி சென்றார்.

அப்போது அவர் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு சிகிச்சை பயனின்றி மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com