ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

தலை துண்டான பரிதாபம் போலீசார் விசாரணை
ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை ஆவாரம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை இவரது மகன் அசோகன் (வயது 53) இவருக்கு திருமணமாகி ஆதிலட்சுமி என்கிற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர்.

இவர் நேற்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்தில் அவ்வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலை துண்டாகி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com