2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்

உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை போலீசார் விசாரணை
2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த சாமகவுண்டனூர் போயர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சைத்ரா (வயது23) இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்த சவித்ரா திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவியை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது சம்பந்தமாக கணவர் சங்கர் தனது மனைவி சைத்ரா காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சைத்ராவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com