ஆம்பூரில் 2 குழந்தைகளின் தாய் மாயம்

கணவர் புகார் போலீசார் விசாரணை
ஆம்பூரில் 2 குழந்தைகளின் தாய் மாயம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் பி. கஸ்பா பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பிரியா ஆம்பூர் பஜார் பகுதியில் துணி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியா கடந்த 16-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் பல்வேறு இடங்களில் மனைவியை தேடி உள்ளார்.

அவர் கிடைக்காததால் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com