வாலிபர் வீட்டை எரித்த கணவன்-மனைவி கைது

காதல் தகராறில் விபரீதம் போலீசார் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்
வாலிபர் வீட்டை எரித்த கணவன்-மனைவி கைது
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25).

இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய்யின் வீட்டுக்குச் சென்று கடபாரையால் கதவுகளை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டை தீ வைத்து எரித்த பெண்ணின் தந்தை சிவா மற்றும் தாயார் பாரதியை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com