திருப்பத்தூரில் வாக்குசாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பேசிய போது எடுத்த படம்.
திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பேசிய போது எடுத்த படம்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களிடையே காணொளி காசி மூலம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள டிஎன்டி அருண் திருமண மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த காணொளி காட்சி மூலம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பத்தூர் நகரம், ஒன்றியம், கந்திலி கிழக்கு மேற்கு தெற்கு, ஒன்றியம், சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் பங்கேற்றனர்.

இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழகம் முதலமைச்சரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது:-

வாக்குசாவடி முகவர்கள் இனிவரும் காலங்களில் வாக்காளர்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் திருத்தம், புதிய வாக்கா ளர்கள்சேர்த்தல், உள்ளிட்ட படிவங்களை வாங்கி வாக்காளர்களுக்கு நிரப்பிக் கொடுக்க வேண்டும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.நல்லதம்பி எம் எல் ஏ திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com