மதுவிற்ற கடை உரிமையாளர் மீது வழக்கு

போலீசார் ரோந்து பணியில் சிக்கினர் அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுவிற்ற கடை உரிமையாளர் மீது வழக்கு
Published on

ஜோலார்பேட்டை:

திருவள்ளுவர் தினத்தை முன் னிட்டு நேற்று டாஸ்மாக் கடை களுக்கு விடுமுறை விடப்பட் டது. இதனால் ஜோலார் பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக் டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது பாச்சல் பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்குசென்று பெட்டிக்கடை யில் சோதனை செய்ததில் அரசு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரி மையாளர் ஜோதி (வயது 60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com