ஆம்பூரில் பைக் திருடன் கைது

பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்ததால் சந்தேகம். வாகன சோதனையில் சிக்கினார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை செய்தார்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கை ஓட்டி வந்தவர் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் நாயக்கனேரி ஊராட்சி சீக்குஜேனை பகுதியை சேர்ந்த ஜெயவேல் மகன் சக்திவேல் வயது (23) கட்டிட தொழிலாளி என தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் டவுன் முகமது புறா 2-வது தெரு பகுதியை சேர்ந்த முகம்மது பாஷா மகன் முகம்மது காதிக் வயது (38) என்கிற தோல் வியாபாரியின் பைக் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுத்திருந்தார்.

திருடு போன பைக் சக்திவேல் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பைக்கை பறிமுதல் செய்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com