கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்

போக்சோவில் கைது வேலூர் ஜெயிலில் அடைப்பு
கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டி தோப்பை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 23). மீன் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கரூரில் பதுங்கி இருந்த பாட்ஷாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com