ஜெயிலில் இருந்து ஜாமினில் வந்த வாலிபருக்கு கத்தி வெட்டு

அண்ணன், தம்பி கைது போலீசார் விசாரணை
ஜெயிலில் இருந்து ஜாமினில் வந்த வாலிபருக்கு கத்தி வெட்டு
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே சான்றோர் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் அஜய் (வயது 20).

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார்.

நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கருணா மகன்கள் வினோத் குமார் (20) அவரது அண்ணன் சக்திவேல் வயது (22) ஆகிய இருவரும் சேர்ந்து அஜயை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அஜயை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விநோத்குமார், சக்திவேல் ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.

முன்விரோத தகராறு காரணமாக வெட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com