முன் விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

2 பேர் கைதுஜெயிலில் அடைத்தனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). கம்பி கொல்லையை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (21), சந்தோஷ் (25). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் வந்த அரவிந்தனை, சந்தோஷ் மற்றும் மணிகண்டன் வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து அரவிந்தனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கத்தியால் குத்திய மணிகண்டன், சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com