கிராம மக்களை அச்சுறுத்தி வரும் மர்ம விலங்கு

வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து கிராம மக்கள் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்
கிராம மக்களை அச்சுறுத்தி வரும் மர்ம விலங்கு
Published on

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்தது. கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 3 ஆடுகள் பலியானது.

கிராம மக்கள் அச்சம்

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதனாஞ்சேரி, சங்கத்து வட்டம் மற்றும் முருகன்கு ட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை யினர் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கிராமத்தில் சுற்றி திரியும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com