ஆட்டோ மீது லாரி மோதி 8 மாணவர்கள் படுகாயம்

போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆட்டோ மீது லாரி மோதி 8 மாணவர்கள் படுகாயம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ இன்று காலை ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ராஜா சேகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத பைக் மீது மோதி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சாலையில் கவிழ்ந்த ஆட்டோவால் ஆம்பூர் -வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து ஆட்டோவை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com