மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் சாவு

கிராம மக்கள் பீதி நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்
மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் சாவு
Published on

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக முன்பு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் இறந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.

இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்து இன்று காலை வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com