தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

10 பைக் பறிமுதல் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் குற்ற பிரிவு போலீசார் நேற்றிரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் போலீசாரை பார்த்து பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள கோட்டைகாலனி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது18), வல்லரசன் (24), அரவிந்தன் (20) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com