ெரயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

7 கிலோ பறிமுதல் ஜெயிலில் அடைப்பு
ெரயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
Published on

ஜோலார்பேட்டை:

ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரு ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டியில் உள்ள பொதுப் பெட்டியில் சோதனை செய்தனர். இதில் ஒரிசா மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி பூஷன் மகாகுட் (வயது 23) மற்றும் கார்த்திக் போய் ( 20) சந்தேகத்தின் பேரில் இவர்களது பையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜோலார்பேட்டை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com