2 பாம்புகள் பிடிப்பட்டது

வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் காப்பு காட்டில் விடப்பட்டது
2 பாம்புகள் பிடிப்பட்டது
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே பாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா ண்டேஸ்வரி என்பவர் தனது வீட்டின் அருகே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே தோழர் கவுண்டர் தெருவில் கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் பின்புறம் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை பெற்று கொண்டு வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் 2 பாம்புகளை விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com