காணாமல் போன 163 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.37.50 லட்சம் மதிப்பிலான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மனுக்கள் மீது போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி மாவட்ட முழுவதும் செல்போன்க ளை தவறவிட்ட 163 நபர்களை வரவழைத்து அவர்களின் செல்போன்களை நேரடியாக உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் பொதுமக்களிடம் எஸ்.பி. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும் அதை வாங்கி சிம்கார்டு போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

இது போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப் பெற்றாலும் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் 9442992526 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் புகாரின் மீது உடனடியாக சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் செல்போன்களை இழந்த பயனாளிகள் அனைவரும் மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கை யர்க்கரசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியின் போது ஏ.டி.எஸ்.பி.புஷ்பராஜ், திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள், செல்போனை தவறவிட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com