நெல்லையில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் இன்று சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்த காட்சி.
பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்த காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடந்துவருகிறது.

அதிகாரப்பூர்வமாக கட்சி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாததால் வேட்புமனுதாக்கல் சூடு பிடிக்கவில்லை. கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான சுயேட்சை வேட்பா ளர்கள் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வரை நெல்லை மாவட்டத்தில் 8 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ஏர்வாடி பேரூராட்சிக்கு ஒருவரும், வடக்கு வள்ளியூர் பேரூராட் சிக்கு ஒருவரும், வீரவநல்லூர் பேரூராட்சிக்கு 3 பேரும் என பேரூராட்சிகளில் 5 பேரும், சிங்கை நகராட்சியில் ஒருவர், களக்காடு நகராட்சியில் 2 பேர் என 3 பேர் நகராட்சிகளில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் கடந்த சனிக்கிழமை வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடந்தது.

இதில் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் இன்று சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பேரூராட்சிகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதுபோல நகராட்சிகளில் 5-க்கும் மேற் பட்டவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 4&ந்தேதி இறுதி நாளாகும்.

எனவே பிரதான கட்சிகளான அ.தி.மு.க.- தி.மு.க. கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை காலைக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு அவர்களும் 4-ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வேட்புமனுதாக்கல் நடை பெறும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேர்தலையொட்டி பறக்கும் படை வாகன சோதனை நடந்து வருகிறது. மாநகர பகுதிகளில் முக்கிய இடங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் பறக்கும் படை அதிகாரிகள் ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்கின்றனர்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள், பணம் கொண்டு செல்லப்படுகிறதா எனவும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com