வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

உவரியை சேர்ந்த ராஜதுரை என்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

உவரி பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 26). இவர் நேற்று உவரி-இடையன்குடி சாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கடந்த சில நாட்களாக ராஜதுரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com