உலக தாய்மொழி நாளை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைப்பினர்

இன்று உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு அமைப்பினர் உலக தாய்மொழி நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உலக தாய்மொழி நாளை தமிழுணர்வு சூளுரை நாளாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பிய அமைப்பினர்.
உலக தாய்மொழி நாளை தமிழுணர்வு சூளுரை நாளாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பிய அமைப்பினர்.
Published on

நெல்லை:

இன்று உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு அமைப்பினர் உலக தாய்மொழி நாளை கொண்டாடினர்.

தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பன் பாண்டியன் ஆகியோர் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தினர்.உலக தாய் மொழி நாளை தமிழுணர்வு சூளுரை நாளாக அறிவிக்க வேண்டும், தமிழை ஆட்சி மொழி என்று அறிவித்து அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோஷ மிட்டனர்.

மேலும் புதிய பஸ் நிலையம் முன்புறம் அமைக் கப்பட்டுள்ள ஸ்டெம் பார்க் பூங்காவில் தமிழ் எழுத்துக்களை பார்க்க முடியவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

பின்னர் உலக தாய்மொழி தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com