பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான வலுதூக்கும் போட்டி

பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்டு வலுதூக்கிய வீரர்.
போட்டியில் கலந்து கொண்டு வலுதூக்கிய வீரர்.
Published on

நெல்லை:

இதில்  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வருகிற 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இதில் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பொருளாளர் சிவராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மனைவி ஷீபா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

18 வயதுக்கு உட்பட்டவர், 23 வயதுக்குட்பட்டோர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com