நெல்லையில் மாடு குறுக்கே பாய்ந்ததால் விபத்து-காவலாளி பலி

நெல்லை அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது51). இவர் பேட்டை ஐ.டி.ஐ. வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் கொண்டாநகரம் அருகே வந்தபோது, மாடு குறுக்கே பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமசாமி தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனில் லாமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com