நெல்லை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-1,600 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,600 பேரை போலீசார் கைது செய்தனர்.
வண்ணார்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்ட காட்சி.
வண்ணார்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்ட காட்சி.
Published on

நெல்லை:

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கி யது.

தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக இன்று குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் வங்கி ஊழியர்கள், எல்.ஐ.சி. ஊழியர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றதால் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில்  பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

நெல்லை வண்ணார் பேட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார்.

தொ.மு.ச. தர்மன், சி.ஐ.டி.யூ. மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. காசி விஸ்வநாதன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன், எச்.எம்.எஸ். தென் கரை மகாராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. ரமேஷ், டி.ஐ.எஸ்.எப். சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற் சங்கங்களை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை  ரவுண்டானா சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 175 பெண்கள் உள்பட  600 பேரை போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூரில் பழைய பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். அங்கு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை பூக்கடை பஜாரில் நடைபெற்ற மறியலில் தொழிற்சங்க நிர்வாகிகள் மைக்கேல், சோமசுந்திரம், மதிவாணன், வண்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல நாங்குநேரி, சிங்கை, வீரவநல்லூர், முக்கூடல் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.  

மொத்தம் 1,600-க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com