மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் மலை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.

இதனால் இன்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் மணிமுத்தாறு சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com