

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் 3-ம் அலை காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்தது. இதனால் தினசரி பாதிப்பு 800-ஐ தாண்டி அதிர்ச்சி அளித்தது.
குறிப்பாக மாநகர பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி இருந்ததால் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது.
இதனால் 3-வது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் 2,3 நாட்களிலேயே அதன் பிடியில் இருந்து குணமாகினர். மேலும் சிலர் வீட்டு தனிமையிலேயே குணமாகினர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக 3-வது அலையும் வீழ்ச்சியடைய தொடங்கியது. இதனால் நெல்லை மாவட்டத் திலும் தினசரி பாதிப்பு படிப்படி யாக சரிவை கண்டு வருகிறது.
இன்று மாவட்டம் முழுவதுமான பாதிப்பு 100-க்குள் சரிந்தது. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மாநகர பகுதிகளில் 27 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 74 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.