போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் - திசையன்விளை பேரூராட்சி அறிவிப்பு

போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என திசையன்விளை பேரூராட்சி அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சுகாதாரகேடு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் பன்றிகள், கழுதைகளை வீடுகளில் வைத்து கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என பேரூராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தவறும்பட்சத்தில் பஜார் சாலைகள் மற்றும் சந்தை வளாகத்தில் சுற்றிதிரிந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் இத்தகவலை பேரூராட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com