நெல்லை அருகே பெண்ணை மிரட்டி நகை-பணம் கொள்ளை

நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே நெடுங்குளம் கிராமத்தில் பெண்ணை மிரட்டி நகை-பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி பாப்பா (வயது 37).

நேற்று இவர் வீட்டில் இருந்து நாங்குநேரி வங்கியில் பணம் போடுவதற்காக பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர் கள் அவரை வழிமறித்து, அவரது கையில் இருந்த

ரூ.1,500 ரொக்கப்பணம், செல்போன் மற்றும் கழுத்தில் கிடந்த செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பாப்பா மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். கொள்ளை யர்கள் பறித்து சென்ற செயின் கவரிங் செயின் ஆகும்.

ஆனாலும் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிர மாக தேடி வந்தனர்.  இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்ற காட்சி அருகில் உள்ள ஒரு சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

இதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சாத்தான்குளம் அருகே உள்ள மேலபுளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பிச்சைக் கண்ணு (வயது 22) என்ற வாலிபரை கைது செய்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த அவரது நண்பர் பாரதி செல்வன் (21) என்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com