நாங்குநேரி அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம்

நாங்குநேரி அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பலியான வாலிபர் பெயர் விபரம் தெரியவில்லை.

பலியான வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து உள்ளார். வேறு ஆடைகள் அந்த பகுதியில் இல்லை.

இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை அடித்து கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் உடலை வீசி சென்றார்களா? என்று சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com