ராதாபுரத்தில் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி மாடி பகுதிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். 

இதனை பார்த்த மாணவிகள் கூச்சலிடவே பள்ளி ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com