

பாளையை அடுத்த நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 55). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சங்கரலிங்கம் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.