நெல்லை மார்க்கெட்டில் காதலர் தினத்திற்காக குவியும் ரோஜா பூக்கள்

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜா பூக்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 -ந் தேதியை காதலர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டதால் காதலர் தின கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடு களுக்கு தளர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு காதலர் தினத்தை சிறப்பாக கொண் டாட பல்வேறு இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

நெல்லை பூ மார்க்கெட்டில் வழக்கமாக ரோஜாப்பூக்கள் குறைவாகத்தான் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த காதலர் தினத்திற்கு ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனால் தற்போது ஒரு கிலோ ரோஜாப்பூ ரூ.150 க்கு விற்கப்படுகிறது. நாளை இதன் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது

காதலர் தினத்தன்று நாளை மறுநாள் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இது தவிர ரோஜா பூக்கள் மூலம் செய்யப்படும் பொக்கே வகைகளுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.நெல்லை பகுதியில் பொக்கேக்கள் செய்யும் கம்பெனிக்கு ஆன்லைன் மூலம் இப்போது வெகுவாக ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கியுள்ளது.
 
நெல்லை பகுதியில் சாதாரணமாக சுமார் 10 பொக்கே வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 50 க்கும் மேல் பொக்கே ஆர்டர்கள் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதுதவிர காதலர் தின வாழ்த்து அட்டை களுக்கும் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர்கள்-இளம்பெண்கள் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடை களுக்கு சென்று விதவிதமான பல்வேறு வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை வாங்கி வருகிறார்கள்.
 

மேலும் பரிசுப் பொருட்கள் வாங்கவும், ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்காக இந்த ஆண்டு பல்வேறு மனதை மயக்கும் வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com