நெல்லையில் ஆற்றில் மூழ்கி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முருகனை மீட்ட காட்சி.
ஆற்றில் மூழ்கிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முருகனை மீட்ட காட்சி.
Published on

நெல்லை:

பாளை வ.உ.சி. மைதானம் எதிரே உள்ள மாருதி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது62). இவர் சப்--இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இன்று காலை முருகன் வண்ணார்பேட்டை பேராட்சி செல்வி அம்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகி யும் அவர் வீட்டிற்கு திரும்பாததால் அவரது மகன் பூபதி செல்வ சுந்தர் தனது தந்தையை தேடி வண்ணார் பேட்டை ஆற்றுக்கு சென்றார். 

அங்கு அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் கிடந்துள்ளது. இதனால் தந்தை ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று பாளை தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

உடனே தீயணைப்பு  மீட்பு படையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று தேடியபோது ஆற்றில் மூழ்கி முருகன் இறந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்பு படையினர் மீட்டனர். 

இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com