பாளை அருகே குளத்தில் மீன்பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலி

பாளை அருகே குளத்தில் மீன்பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான காட்வின் ஆபேல்.
பலியான காட்வின் ஆபேல்.
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் காட்வின் ஆபேல் (வயது 61).

நேற்று இவர் ஆச்சி மடம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் நேற்று இரவு அவரது உறவினர்கள் அந்த குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்வின் ஆபேலின் உடமைகள் அனைத்தும் கரையில் இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கூறி சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று பார்வையிட்டனர். குளத்தில் சில பகுதிகளில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் காட்வின் ஆபேல் உடல் எங்கும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அந்த குளத்தின் கரையில் அவரது உடல் பிணமாக கிடந்தது. சம்பவ இடத்துக்கு சிவந்திபட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

மேலும் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com