டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நெல்லையில் போலீஸ் நிலையங்களை சுத்தப்படுத்திய போலீசார்

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் நெல்லையில் இன்று போலீஸ் நிலையங்களை போலீசார் சுத்தப்படுத்தினர்.
பாளை தெற்கு பஜாரில் உள்ள காவலர்குடியிருப்பு பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசார்.
பாளை தெற்கு பஜாரில் உள்ள காவலர்குடியிருப்பு பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசார்.
Published on

நெல்லை:

தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், அலுவலக கட்டடங்களை தூய்மையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு  போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணியினை ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது சனிக்கிழமை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

அதனடிப்படையில் நெல்லையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இன்று சுத்தப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மாநகர பகுதியிலும் பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர், மகளிர் போலீஸ் நிலையங்கள், பெருமாள்புரம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களை போலீசார் இன்று தூய்மைப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com