தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

முக்கூடல் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

முக்கூடலை அடுத்த திருப்புடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 67). இவர் நேற்று மதியம் தோட்டத்தில் இளநீர் வெட்டுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து  சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுடலைமுத்து பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com