

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 26 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மாநகர பகுதியில் மட்டும் 10 பேர் அடங்குவர். வள்ளியூரில் 7 பேர், ராதாபுரத்தில் 4 பேர், பாளையில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பை, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி ஆகிய 4 வட்டார பகுதிகளில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.