தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி- கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக  செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் ‘எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வினாடி-வினா போட்டி வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, காணொலிக் காட்சி தயாரிக்கும் போட்டி, விளம்பரப் பட வடிவமைப்புப் போட்டி என 5 பிரிவுகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டிகளுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மார்ச் 15-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விழிப்புணர்வு போட்டிகளுக்கான காலஅவகாசம் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள் போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை இணைத்து 31-ந்தேதிக்குள் votercontest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com