வைகறை ஹோமியோபதி மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு

வைகறை ஹோமியோபதி மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு, பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

சர்வதேச ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு நெல்லை அருகே உள்ள தருவையில் அமைந்துள்ள வைகறை ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கு, பயிற்சி முகாம், புதிய புத்தக வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது.

இதில் வைகறை மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பரமசிவன் முன்னிலை வகித்தார். டாக்டர் சோலையப்பன் (மத்திய பிரதேசம்) டாக்டர் ஜெகதா (சென்னை), டாக்டர்கள் சுப்பிரமணியன், வீரபாலாஜி (மதுரை) மற்றும் வைகறையை சேர்ந்த மருத்துவர்கள் துரைராஜ், அசோகன், பாலமுருகன், ஆல்வின் பாபு, வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 10-ந்தேதியன்று ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹனிமேன் பிறந்த நாளன்று வளாகத்தில் அமைந்துள்ள ஹனிமேன் மணி மண்டபத்தில் நிறுவப்பட்ட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அரசு மற்றும் இதர மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com