நாங்குநேரி அருகே மின் மோட்டார் திருட்டு

நாங்குநேரி அருகே தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது78). இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

நேற்று வழக்கம் போல் பேச்சியம்மாள் தோட் டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்றார். அப்போது அங்கிருந்த மின் மோட்டார் திருட்டு போய் இருந்தது.

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் மோட்டாரை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com