ராதாபுரம் தாலுகாவில் இருக்கன்துறை முதல் சங்கனாபுரம் வரை கன ரக லாரிகள் செல்ல தடை

ராதாபுரம் தாலுகாவில் இருக்கன் துறை முதல் சங்கனாபுரம் வரையுள்ள நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட ரோட்டில் பொது மக்கள் நலன் கருதி அதிக எடை கொண்ட பாரத்துடன் செல்லும் கனரக லாரிகள் செல்ல சம்பந்தப்பட்ட துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வள்ளியூர்:

கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை முதல் கொத்தன்குளம், சங்கனாபுரம் மற்றும் கணபதியாபுரம் ஜங்சன் வரையுள்ள 9 கிலோமீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் தார் ரோடு ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு போடப்பட்டுள்ள ரோடு ஒரு வழிப்பதையாக குறுகலாக உள்ளதால் பொது மக்கள் பயணிக்கும்அரசு பஸ்கள் மற்றும் ஏனைய சிறிய வாகனங்கள் மட்டும் அதன் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில் இருக்கன்துறையிலிருந்து அதிக எடையுடன் கூடிய கற்களை ஏற்றி செல்லும் கன ரக டாரஸ் லாரிகள் அவ் வழியே அடிக்கடி செல்வதால் ரோடு மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

எனவே அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக சம்பந்தப்பட்ட துறை மூலம் இருக்கன் துறை மற்றும் சங்கனாபுரம் வரை செல்லும் ரோட்டின் எல்லை பகுதியில் கன ரக எடை கொண்ட லாரிகள் செல்வதற்குதடை விதிக்கப்பட்டு அதுபற்றிய எச்சரிக்கை போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பினை மீறி கன ரக டாரஸ் லாரிகள் இருக்கன் துறை மற்றும் சங்கனாபுரம் ரோட்டில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com