

வள்ளியூர்:
நேரு நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வள்ளியூர் வட்டாரத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக நம் பூமி நமது நலம் என்ற இவ்வாண்டு கருத்தினை மையமாக கொண்டு 6 முதல் 9-ம் வரை பயிலும் மாணவர்-களுக்கு பென்சில் ஓவியம் மற்றும் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல் போட்டி நடத்த பட்டது.
இதில் பென்சில் ஓவியம் போட்டியில் பாத்திமா மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா முதல் பரிசும், தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் பள்ளியை சார்ந்த மாணவி மிச்செல் ரெபினா இரண்டாம் பரிசும், விவேகானந்தா மேல்நிலை பள்ளியை சேர்ந்த நித்யஸ்ரீ மூன்றாம் பரிசும் வென்றுள்-ளனர்.
விழிப்புணர்வு வாசகம் எழுதுதல் போட்டியில் கன்கார்டியா பள்ளியை சார்ந்த மாணவி செல்வ சந்தியா முதல் பரிசும், சால்வேஷன் ஆர்மி பள்ளியை சார்ந்த மாணவி நபிதா இரண்டாம் பரிசும், அரசு மேல்நிலை பள்ளியை சார்ந்த மாணவி தன்சியா மூன்றாம் பரிசும் வென்றுள்ளனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேரு நர்சிங் கல்லூரி சார்பாக ரொக்க பரிசு தலா ரூ.3,000, ரூ. 2,000, ரூ. 1,000 முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக கல்லூரியின் தாளாளர் டி.டி.என்.லாரன்ஸ், கல்லூரியின் தலைவர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரி முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் மற்றும் கல்லூரி துணை முதல்வர்பேபி உமா வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியை புஷ்பா ஹெர்பர்ட் மற்றும் ஆசிரியை அட்லின் லீனா ஆகியோர் செய்திருந்தனர்.