

நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறையில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு போட்டியின் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை தலைவர் உதவி பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கிற்கு வள நபராக ஓய்வு பெற்ற திருச்சி மண்டல முன்னாள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மூத்த மண்டல மேலாளர் தாசன் கலந்து கொண்டு ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு போட்டியின் பயிற்சி முறைகள், விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி மாணவ& மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை உதவி பேராசிரியர் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைதொடர்ந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடு களை உதவி பேராசிரியர் துரை செய்திருந்தார். முன்னதாக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் சேது வரவேற்றார்.
கருத்தரங்கில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.