நெல்லை புத்தக திருவிழாவில் குவிந்த மாணவ- மாணவிகள்

நெல்லை புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அங்கு ஆர்வமுடன் திரண்டனர்.
புத்தகங்களை தேர்வு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.
புத்தகங்களை தேர்வு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

பாளை வ.உ.சி. மைதானத்தில் பொருநை நெல்லை புத்தக திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

இதனையொட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டது.

இந்த அரங்குகளில் கலை, இலக்கியம், வரலாற்று நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றன.

இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், எழுத் தாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வ முடன் பார்வையிட்டு புத்தகங் களையும் வாங்கி சென்றனர்.

தினந்தோறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறை, காணி குறும்படம் வெளியீடு, புத்தகங்கள் வெளியீடு, கருத்தரங்கம், கைவினை பொருட்கள் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளும் புத்தக திருவிழாவில் நடைபெற்றது.

இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புத்தக திருவிழாவை கண்டு களித்துள்ளனர். இறுதி நாளான இன்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இன்று மாணவர்கள் பயிற்சி பட்டறை சார்பில் நீர் வண்ண ஓவியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை, பாரம்பரியம், நாகரீகம் தொடர்பான ஏராள மான ஓவியங்களை மாணவ- மாணவிகள் வரைந்தனர்.

கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டு புத்தகங் களை வாங்கினர்.

11 நாட்கள் நடைபெற்ற இந்த கோலாகல திருவிழாவில் கோடிக் கணக்கில் புத்தகங்கள் விற்பனையானது.  இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப் பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சான் றிதழ்களை வழங்குகிறார்.

மேலும் உலக சாதனை நிகழ்ச்சியாக நடந்த 24 மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், நரிக்குறவர் இன மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கு கிறார். பரிசுகளும் வழங்கப் படுகிறது.

நிறைவு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, பேராசிரியர் சவுந்தர மகாதேவன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தர்மராஜ், கவிஞர் மகுடேஸ்வரன், தாசில் தார் (பேரிடர் மேலாண்மை) செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com