திசையன்விளை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
Published on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திசையன்விளை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

வணிகவரித்துறை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

உடன்குடி, இட்டமொழி, நாங்குநேரி, உவரி சாலைகளில் சென்ற நான்கு சக்கரம், 2 சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். 

தேர்தலையொட்டி பரிசு பொருட்கள், மது பிரியர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்களா? எனவும் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com