நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்- கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் விஷ்ணு
கலெக்டர் விஷ்ணு
Published on

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் 22-ந் தேதி அன்றும் மதுக்கடைகளை மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை உத்தரவிட்டுள்ளது.

 அதன்படி தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மூடப்படுகிறது.

எனவே நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதியை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை 4 நாட்கள் மூட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com