இரட்டை கொலை வழக்கில் கைதான விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதிப்பு

களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினர்கள் 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது52),  விவசாயி.

இவர் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பாலையா உறவினர்களான நம்பி (55), அவரது மகன் ரமேஷ் (24) ஆகியோர் பாலையாவை தட்டி கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நம்பி, ரமேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் நம்பி, ரமேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக களக்காடு போலீசார் பாலையாவை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் இன்று தீர்ப்பு கூறினார். அப்போது பாலையாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை யும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com